Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’… முதல் சிங்கிள் எப்போது ரிலீஸ் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘கேப்டன் மில்லர்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதனை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர்.
இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை அடுத்த ஆண்டு (2024) பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘கில்லர் கில்லர்’ஐ வருகிற நவம்பர் 22-ஆம் தேதி வெளியிடவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
https://twitter.com/dhanushkraja/status/1726580844503187915?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1726580844503187915%7Ctwgr%5Ea34605709a8dac7fdeb53a2ab36e17bed64c9909%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-691520501581756865.ampproject.net%2F2310301456000%2Fframe.html
கருத்துகள்
கருத்துரையிடுக