10 ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கும் 'கில்லர்'.. வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

 

கோலிவுட் சினிமாவில் பிசியான வில்லனாக பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. இவர் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்பியுள்ளார். அதன்படி பான் இந்திய அளவில் 'கில்லர்' என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கும் 'கில்லர்'.. வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் எஸ்.ஜே. சூர்யா , நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாளைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. இதனை முன்னிட்டு 'கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது பிசியான வில்லன் நடிகராக ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. இவர் தற்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து எஸ்.ஜே. சூர்யா இயக்கும் 'கில்லர்' படத்தினை தயாரிக்கிறார். 


இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் நாளைய தினம் தனது பிறந்தநாளை முன்னிட்டு 'கில்லர்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பூ வைத்திருக்கும் ஹீரோயினை தோளில் தூக்கி போட்டு, கோர்ட் ஷுட்டில் துப்பாக்கியுடன் எஸ்.ஜே. சூர்யா இருப்பதை போன்று ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதே போல் மற்றொரு போஸ்டரில் எஸ்.ஜே. சூர்யா மட்டும் கன்னுடன் நிற்கிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
'கில்லர்' படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடந்த நிலையில், தற்போது ஷுட்டிங் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. கில்லர் படத்தில் ஹீரோயினாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இவர் 'அயோத்தி' படத்தின் வாயிலாக ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். இப்படத்தில் தமிழில் வசனங்கள் பேசவில்லை என்றாலும், அப்பாவியாக பெண்ணாக நடித்து வரவேற்பினை பெற்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது 'கில்லர்' படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் ப்ரீத்தி அஸ்ரானி. இது தவிர கவின் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய அளவில் கில்லர் படத்தினை இயக்குகிறார் எஸ்.ஜே. சூர்யா. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'மாநாடு' படத்தில் வில்லனாக நடித்து வரவேற்பினை பெற்ற எஸ்.ஜே. சூர்யா தொடர்ந்து வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் அவரை தேடி வந்தது. இதனிடையில் தெலுங்கில் அறிமுகமாகி அங்கும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தமிழ், தெலுங்கு மொழியில் பிசியான நடிகராக நெகட்டிவ் ரோலில் கலக்கி கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.


இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியுள்ளார். அஜித்தின் வாலி படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா, விஜய் நடிப்பில் குஷியை இயக்கினார் இந்த இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இதனையடுத்து நியூ என்ற படத்தினை இயக்கி ஹீரோவாகவும் நடித்தார் எஸ்.ஜே. சூர்யா. கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'இசை' படத்தினை இயக்கி நடித்திருந்தார்.
இதன்பின் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார் எஸ்.ஜே. சூர்யா, பத்து ஆண்டுகளுக்கு பிறகு 'கில்லர்' படத்தின் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்த்துள்ளர். இதனிடையில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்தார் 2' படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்கிறார். மேலும், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்