கூலி படத்திற்கு இருக்கும் ஓவர் ஹைப்..லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு

 

கூலி படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. இதனால் லோகேஷ் கனகராஜ் சில முக்கியமான அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன

கூலி ஹைப்

லோகேஷ் கனகராஜ் எடுத்த முடிவு

கூலி படத்திற்கு இருக்கும் ஓவர் ஹைப்..லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் தான் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் மிக விரைவில் திரையில் வெளியாக இருக்கின்றது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தற்போது துவங்கியிருக்கிறது. கடந்த சில வாரங்களில் கூலி திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள், போஸ்டர்ஸ், லோகேஷ் கனகராஜின் பேட்டி என எங்கு திரும்பினாலும் கூலி படத்தை பற்றிய பேச்சு தான் போய்க்கொண்டு இருக்கின்றது.

இன்னும் சொல்லப்போனால் இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் ஹைப் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு ஓவர் ஹைப் உண்டாகி இருப்பதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முடிவு எடுத்திருப்பதாக தெரிகின்றது. அதாவது கூலி படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு பல மாநிலங்களுக்கு செல்வதாக இருந்தார்களாம். தற்போது படத்திற்கு மிகப்பெரிய அளவில் ஹைப் இருப்பதால் அந்த பிளானை எல்லாம் லோகேஷ் கனகராஜ் கேன்செல் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

மும்பை, கேரளா போன்ற பிற மாநிலங்களிலும், சில அயல்நாடுகளுக்கும் சென்று கூலி படத்தை ப்ரொமோட் செய்ய படக்குழு திட்டமிட்டு இருந்தனர்.ஆனால் இப்படத்திலிருந்து வெளியான சிகிட்டு மற்றும் மோனிகா ஆகிய பாடல்கள் வேற லெவெலில் ஹிட்டடித்து படத்தின் மீதான ஹைப்பை உயர்த்தியது. மேலும் ஆமீர் கான், நாகர்ஜுனா போன்றவர்கள் பேட்டிகளில் கூலி படத்தை பற்றி சுவாரஸ்யமான பல விஷயங்களை பேசிவிட்டனர்.

அதுவும் படத்தின் ஹைப்பை அதிகரித்தது. அது போதாது என சமீபத்தில் லோகேஷ் கனகராஜும் கூலி படத்தை பற்றி பல விஷயங்களை பேசியிருந்தார். இவைகளால் கூலி படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் ஹைப் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஓவர் ஹைப் படத்திற்கு பாதகமாக கூட அமையலாம் என கருதும் லோகேஷ் கனகராஜ் இதற்கு மேல் ஹைப் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டாராம். எனவே தான் பிற மாநில ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை செய்யவேண்டாம் என லோகேஷ் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் இசை வெளியீட்டு விழாவை மட்டும் நடத்திவிட்டு அப்போதே படத்தின் ட்ரைலரையும் வெளியிடலாம் என்ற யோசனையிலும் லோகேஷ் கனகராஜ் உள்ளாராம். ட்ரைலருக்காக தனியாக நிகழ்ச்சி நடத்தாமல் இசை வெளியீட்டு விழாவுடன் ட்ரைலரை வெளியிடலாம் என லோகேஷ் சன் நிறுவனத்திடம் கூறியிருப்பதாக கூட பேச்சுக்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினியின் படத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தாமல் இருந்தால் எப்படி என்பதும் ஒருபக்கம் கேள்வியாக இருந்து வருகின்றது.

பொதுவாகவே ரஜினியின் படங்களுக்கு மிகப்பெரிய எதிரிபார்ப்பு இருக்கும். ஆனால் கூலி படத்தை பொறுத்தவரையில் அந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருப்பதாக தெரிகின்றது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஓவர் ஹைப்பால் படத்திற்கு ஏதேனும் சிக்கல் வருமா ? என்பது தான் லோகேஷ் கனகராஜின் யோசனையாக உள்ளது. ஏற்கனவே இதுபோல ஓவர் ஹைப்பில் பல படங்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி வெற்றிபெற முடியாமல் போயிருக்கின்றது.

சமீபத்தில் கூட கமல்ஹாசன் -சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக்லைப் திரைப்படத்தின் மீதும் மாபெரும் ஹைப் இருந்தது. ஆனால் அந்த ஹைப்பை படத்தால் பூர்த்தி செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது. இதையெல்லாம் மனதில் வைத்து தான் லோகேஷ் கனகராஜ் ஓவர் ஹைப் வேண்டாம் என நினைக்கிறாரோ ? என தெரியவில்லை.
மேலும் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விஜய்யின் லியோ திரைப்படமும் ஓவர் ஹைப்பிற்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. எனவே இவையெல்லாம் கண்டிப்பாக லோகேஷ் மனதில் ஓடும். அதனால் தான் ஓவர் ஹைப் வேண்டாம் என்ற முடிவிற்கு லோகேஷ் வந்திருப்பார் என தெரிகின்றது.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்