ஷாம்பு விளம்பரத்தில் வர்ற மாதிரி உங்க முடி இருக்கணுமா? உங்க ஷாம்புல இந்த பொருள் இருக்கான்னு பாருங்க!

 

ஷாம்பு விளம்பரத்தில் வர்ற மாதிரி உங்க முடி இருக்கணுமா? உங்க ஷாம்புல இந்த பொருள் இருக்கான்னு பாருங்க!

தலைமுடி அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்க விரும்பினால் உங்கள் ஷாம்பு சரியானதா என்பதை கவனியுங்கள். சில நேரங்களில் எல்லாம் சரியாக இருந்தாலும் உங்கள் பராமரிப்பு பொருள்கள் தவறாக இருந்தால் அது முடி வளர்ச்சிக்கு உதவாது. அதனால் உங்கள் முடி அடர்த்தியாக வலுவாக இருக்க வேண்டும் உங்கள் ஷாம்புவில் இந்த பொருள் உள்ளதா என்பதை பார்த்து வாங்குங்கள். என்னென்ன பொருள்கள் இருக்க வேண்டும், அவை ஏன் கூந்தலுக்கு முக்கியம் என்பதை தான் இங்கு தெரிந்துகொள்வோம்.




ஷாம்பு விளம்பரத்தில் வர்ற மாதிரி உங்க முடி இருக்கணுமா? உங்க ஷாம்புல இந்த பொருள் இருக்கான்னு பாருங்க!

உங்கள் கூந்தலுக்கு ஷாம்பு தான் பயன்படுத்துகிறீர்கள் என்றால் சரியான ஷாம்புவை தேர்வு செய்வது அவசியம். கடைகளில் பல்வேறு ஷாம்புகள் கிடைக்கின்றன. கூந்தல் பிரச்சனைக்கேற்ப ஒவ்வொன்றையும் பயன்படுத்தலாம்.
க்ளென்சிங், பொடுகு எதிர்ப்பு, முடி உதிர்வு, உச்சந்தலை சொறி, முடி வளர்ச்சி, முடி அடர்த்திக்கு என்று பல்வேறு விதமான ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு தலைமுடிக்கும் ஏற்றாற் போன்று ஷாம்புக்கள் வாங்கி பயன்படுத்தலாம். அதே போன்று உங்கள் முடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க விரும்பினால் நீங்கள் உங்கள் ஷாம்புவில் இந்த பொருள்கள் உள்ளதா என்பதை கவனியுங்கள்.

ஷாம்புவில் காஃபின் உள்ளதா என்பதை கவனியுங்கள்

காஃபின் உங்கள் மூளையை தட்டி எழுப்புவது போன்று அதை கூந்தலில் பயன்படுத்தும் போது உச்சந்தலையை தூண்டுகிறது. ஆம் இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது இதனால் முடி நுண்ணறைகள் தூண்டப்பட்டு முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

காஃபின் முடி மெலிவதற்கு காரணமான ஹார்மோனான டிஹெச்டி எதிர்த்து போராட செய்கிறது. உங்கள் தலைமுடி மெலிந்து இருந்தால் நாளடைவில் அதிகரித்தால் நீங்கள் காஃபின் கொண்ட ஷாம்பு பயன்படுத்துங்கள்.


ஷாம்புவில் பயோட்டின் உள்ளதா என்பதை கவனியுங்கள்

தலைமுடி கொட்டுவது அதிகரிக்கும் போது, முடி உதிர்வு தீவிரமாக இருக்கும் போது நீங்கள் காரணம் அறிந்து சிகிச்சை பெற்றாலும் உள்ளுக்கு உணவு முறை மாற்றினாலும் ஷாம்புவில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது பயோட்டின் கொண்ட ஷாம்பு அதாவது வைட்டமின் பி7 கொண்ட ஷாம்பு உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

பயோட்டின் உங்கள் கூந்தல் உதிர்வதை நிறுத்தும் தன்மை கொண்டது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடிக்கு புரதம் அளிக்கிறது. முடி உடைவது அதிகரித்தால் நீங்கள் உங்கள் ஷாம்புவில் பயோட்டின் கொண்ட ஷாம்புவை தேர்வு செய்யுங்கள்.

உங்கள் வழக்கமான கூந்தல் பராமரிப்புடன் பயோட்டின் கொண்ட ஷாம்புவும் இணையும் போது முடி மெலிவது குறைவதை பார்க்கலாம்.


ஷாம்புவில் நியாசினமைடு உள்ளதா

சரும பராமரிப்பில் நியாசினமைடு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இவை கூந்தலுக்கும் உதவும் என்பது தெரியுமா? ஆம் உச்சந்தலைக்கு அதிக நன்மைகளை செய்யும் நியாசினமைடு கொண்ட ஷாம்புவை தேர்வு செய்யுங்கள். நியாசினமைடு என்னும் வைட்டமின் பி3 ஆனது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நுண்ணறை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இது உச்சந்தலை எண்ணெய் தன்மையை குறைக்கிறது. இதனால் அரிப்பு, பொடுகு பிரச்சனைகள் அபாயம் குறையும். மேலும் கூந்தல் வளர ஆரோக்கியமான சூழலும் கிடைக்கும். முடி எண்ணெய் பசை, சிவத்தல், உரிதல் போன்ற எரிச்சலூட்டும் தன்மை குறைகிறது.

உச்சந்தலை வேர்கள் வலுவாக இருப்பதால் முடி உதிர்தல் படிப்படியாக கட்டுக்குள் வருகிறது. உங்கள் ஆயில் தன்மை கொண்ட முடியை கட்டுப்படுத்த ஷாம்புவில் நியாசினமைடு உள்ளதா என்பதை கவனியுங்கள்.


கெரட்டின் கொண்ட ஷாம்பு

கூந்தல் உதிர்வுக்கு காரணம் வெப்ப ஸ்டைலிங், கலரிங், சூரிய ஒளி போன்றவையே. அதனால் இந்த சேதங்களை தடுக்க பராமரிப்பில் ஷாம்புவும் இருக்கட்டும். ஆம் உங்கள் ஷாம்பில் கெரட்டின் கொண்டவற்றை பார்த்து வாங்குங்கள்.

கெரட்டின் கொண்ட ஷாம்பு கூந்தலை பளபளப்பாக வைக்க செய்யும். இது கூந்தலை உயிர்ப்பிக்க கூடியவை.


இது தலைமுடியை மென்மையாக மாற்றும். கூந்தலுக்கு மசாஜ் செய்வது போன்று கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்று கெரட்டின் கொண்ட ஷாம்பு கூந்தலில் வளர்ச்சியையும் பளபளப்பையும் கொடுத்து மெருகேற்றும். தொடர்ந்து பயன்படுத்தும் போது நீங்களே இதை உணர்வீர்கள்.


சா பாமெட்டோ கொண்ட ஷாம்பு உள்ளதா என்பதை கவனியுங்கள்


சமீபத்திய வருடங்களில் சா பாமெட்டோ முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்க பிரபலமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சா பாமெட்டோ என்பது பனை மரக்குடும்பத்தை சார்ந்த பழத்தின் சாறு ஆகும். சிறிய பெர்ரிகளை கொண்ட தாவரமான இது முடி உதிர்தலுக்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது காஃபைனை போன்று கூந்தலுக்கு நன்மை பயக்க செய்யும். முடி மெலிவதற்கு காரணமான டிஹெச் டி என்னும் ஹார்மோன் கட்டுப்படுத்த செய்யும். இதனால் முடி வளர்வது தூண்டப்படுகிறது. சற்று விலை உயர்ந்தவை என்றாலும் உங்கள் முடி அடர்த்தியாக இருக்க விரும்பினால் உங்கள் ஷாம்புவில் சா பாமெட்டோ இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்.


முடி அடர்த்திக்கும் வலிமைக்கும் ஷாம்பு போதுமா?

முடி வளர்ச்சி மற்றும் அடர்த்திக்கு ஷாம்பு நல்லது. ஆனால் ஒரே இரவில் இவை மாயாஜலம் செய்துவிடாது. முடி வளர்ச்சி பராமரிப்பில் இவை ஓர் முக்கிய அங்கம்.

மேற்கண்ட பொருள்கள் உங்கள் உச்சந்தலையில் முடி வளர்ச்சியை தூண்டும் வகையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.

இறுதியாக

கடைகளில் பல வகையான ஷாம்புக்கள் கிடைக்கின்றன. உங்கள் முடியை அடர்த்தியாக வலுவாக வைத்திருக்க நீங்கள் என்ன வகை ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொண்டீர்கள். இது குறித்து சந்தேகம் இருந்தால் உங்கள் நிபுணரிடம் ஆலோசித்து பயன்படுத்துங்கள்.

பொறுப்பு துறப்பு:

இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு பாதுகாப்பான ஒன்றை தேர்வு செய்ய துறை சார்ந்த நிபுணரிடம் ஆலோசிக்கலாம். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்