தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் தேய்ச்சு குளிச்சாங்க, குங்குமம் வெச்சாங்கனு தெரியுமா - இதுதான் அந்த ரகசியம்

 தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள்தேய்ச்சுகுளிச்சாங்க, குங்குமம் வெச்சாங்கனு தெரியுமா - இதுதான் அந்த ரகசியம்

தமிழ் பெண்கள் தினமும் குளிக்கும்போது மஞ்சள் தேய்த்து குளிப்பது வழக்கம். உடல், முகம் என மஞ்சள் தேய்த்து குளிப்பது, குங்குமம் பூசுவது வெறும் கலாச்சாரம் மட்டும் தானா? என்று ஆராய்ந்து பார்த்தால் அதன்பின்னால் பண்பாடு, கலாச்சாரத்தை தாண்டி சரும ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த விஷயமும் சேர்ந்து இருக்கிறது. அது என்னனு தெரிஞ்சிக்கலாமா!

தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் தேய்ச்சு குளிச்சாங்க, குங்குமம் வெச்சாங்கனு தெரியுமா - இதுதான் அந்த ரகசியம்

தமிழ் பெண்கள் என்றால் முன்பெல்லாம் தழைய தழைய மஞ்சள் பூசி குளிப்பார்கள். ஆனால் அதெல்லாம் பட்டிக்காட்டுதனம் என்று சொல்லி நாகரீக வளர்ச்சி அடைந்துவிட்டோம் என்று நம் மரபில் உள்ள விஷயங்களை ஒதுக்குகிறோம் ஆனால் இந்த மஞ்சளும் குங்குமமும் பூசுவதன் பின்னால் இத்தனை நன்மைகள் இருக்கின்றன.


மஞ்சள் பூசி குளிப்பதில் உள்ள அறிவியல் காரணங்கள் என்ன?

அழற்சி எதிர்ப்பு பண்பு

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட் மற்றும் அதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்க உதவுகின்றன.

இதை உணவில் சேர்க்கும்போது எப்படி உள்ளுக்குள் இருக்கும் இன்ஃபிளமேஷன்கள் குறைந்து வாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் தீருகிறதோ அதுபோல சருமத்தில் பயன்படுத்தும்போது வீக்கங்கள், இன்ஃபிளமேஷன்கள் குறையும்.


சருமம் பளபளக்கும்

மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. அதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.

அதை சருமத்திற்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள நச்சுக்கள் குறைவதோடு முகம் பளபளப்பாக மாறும். 


பருக்களை விரட்டும்

மஞ்சளில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து இருக்கின்றன.

இவை முகப்பருக்கள் உண்டாவதற்கான அடிப்படை காரணமான பாக்டீரியாக்களை அழித்து முகப்பருக்கள் வராமல் தடுக்கும். ஏற்கனவே முகப்பருக்கள் இருந்தாலும் அதை வேகமாக மறையச் செய்யும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.


தேவையற்ற முடிகள் நீங்க

இன்றைக்கு வேக்ஸிங், லேசர் ஹேர் ரிமூவல், ஹெர்பல் ஹேர் ரிமூவல் என்று தேவையற்ற முடிகளை நீக்க பல தயாரிப்புகள் வந்துவிட்டன.

ஆனால் காலங்காலமாக நம் மக்கள் உடல் மற்றும் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க இந்த மஞ்சளை தான் பயன்படுத்தி இருக்கிறார்.

தொடர்ந்து மஞ்சளை சருமத்துக்கு பயன்படுத்தும்போது இயற்கையாகவே அது தேவையற்ற முடிகள் வராமல் தடுக்கும். குறிப்பாக முகத்தில் வரும் பூனை முடிகள் குறையும்.


சரும நிறம் அதிகரிக்கும்

தொடர்ந்து தினமும் குளிக்கும்போது மஞ்சள் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை, கருந்திட்டுகள், மங்கு உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கும்.

நாளடைவில் இது உங்களின் சரும நிறத்தையும் மேம்படுத்தும். மஞ்சள் தேய்த்து குளிப்பது சருமத்தின் நிறத்தில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும்.


நெற்றியில் குங்குமம் அப்ளை செய்வதன் பின்னால் இருக்கும் அற்புத நன்மைகள்

நினைவாற்றல் அதிகரிக்க

பெண்கள் குங்குமம் அணிகின்ற இடமான நெற்றியின் மையப்பகுதி மற்றும் நெற்றி வகிடு ஆகிய இரண்டு இடங்களும் அஜ்னா சக்கரம் இருக்கும் இடமாகும். இது மூளையின் முக்கிய நரம்புகள் இணையும் இடம்.

விரல்களால் அழுத்தி குங்குமம் சூடும்போது மன அமைதி கிடைக்கும். அறிவாற்றல் மேம்படும் அதோடு நினைவுத்திறனும் அதிகரிக்கும்.


பிட்யூட்ரி சுரப்பு

குங்குமம் அணிகிற போது பிட்யூட்ரி சுரப்பி தூண்டப்படும். இந்த பிட்யூ்ரி சுரப்பி தான் உடலின் இயக்கத்தை தீர்மானிக்கிற பின்மூளை பகுதியின் முக்கிய இடமாகும்.

இந்த இடத்தில் உள்ள நரம்புகள் வரை தூண்டி ஹிப்போகேம்பஸின் ஆற்றலை தூண்டுகிறது,

இறுதியாக,

தமிழ் பெண்கள் தினமும் குளிக்கும்போது மஞ்சள் தேய்த்து குளிப்பதும் குங்குமம் நெற்றியில் அணிவதும் வெறும் கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அதன்பின்னால் அழகு சார்ந்த விஷயங்களும் அறிவியல் சார்ந்த விஷயங்களும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்றன.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்