ஷாம்பு விளம்பரத்தில் வர்ற மாதிரி உங்க முடி இருக்கணுமா? உங்க ஷாம்புல இந்த பொருள் இருக்கான்னு பாருங்க!
ஷாம்பு விளம்பரத்தில் வர்ற மாதிரி உங்க முடி இருக்கணுமா? உங்க ஷாம்புல இந்த பொருள் இருக்கான்னு பாருங்க! தலைமுடி அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்க விரும்பினால் உங்கள் ஷாம்பு சரியானதா என்பதை கவனியுங்கள். சில நேரங்களில் எல்லாம் சரியாக இருந்தாலும் உங்கள் பராமரிப்பு பொருள்கள் தவறாக இருந்தால் அது முடி வளர்ச்சிக்கு உதவாது. அதனால் உங்கள் முடி அடர்த்தியாக வலுவாக இருக்க வேண்டும் உங்கள் ஷாம்புவில் இந்த பொருள் உள்ளதா என்பதை பார்த்து வாங்குங்கள். என்னென்ன பொருள்கள் இருக்க வேண்டும், அவை ஏன் கூந்தலுக்கு முக்கியம் என்பதை தான் இங்கு தெரிந்துகொள்வோம். உங்கள் கூந்தலுக்கு ஷாம்பு தான் பயன்படுத்துகிறீர்கள் என்றால் சரியான ஷாம்புவை தேர்வு செய்வது அவசியம். கடைகளில் பல்வேறு ஷாம்புகள் கிடைக்கின்றன. கூந்தல் பிரச்சனைக்கேற்ப ஒவ்வொன்றையும் பயன்படுத்தலாம். க்ளென்சிங், பொடுகு எதிர்ப்பு, முடி உதிர்வு, உச்சந்தலை சொறி, முடி வளர்ச்சி, முடி அடர்த்திக்கு என்று பல்வேறு விதமான ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு தலைமுடிக்கும் ஏற்றாற் போன்று ஷாம்புக்கள் வாங்கி பயன்படுத்தலாம். அதே போன்று உங்கள் முடியை வலுவாகவும் அடர்த்தியாகவும...